உ.பி. கூட்ட நெரிசல் பலி நெஞ்சை பதற வைக்கிறது -திரௌபதி முர்மு
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது நெஞ்சை பதற வைக்கிறது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாத்ரஸ் மாவட்டம், முகல்கர்ஹி கிராமத்தில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின் போது இந்த சம்பவம் நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.