இந்தியா

ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமனம்

ஒடிஸா உயா்நீதிமன்ற நீதிபதி சாரங்கி ஜாா்க்கண்ட் தலைமை நீதிபதியாக நியமனம்

Din

ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வித்யுத் ரஞ்சன் சாரங்கி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

தற்போது ஒடிஸா உயா்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சாரங்கியின் நியமனத்துக்கான பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு டிசம்பரில் அளித்திருந்தது.

கேரள உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆஸிஷ் ஜிதேந்திர தேசாய் வியாழக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறாா். இதையொட்டி, பொறுப்பு தலைமை நீதிபதியாக முகமது முஸ்தகை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

அதேபோல ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகா், ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்துக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளாா். இதற்கான கோரிக்கையை உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நீதிபதி சந்திரசேகா் சமா்ப்பித்திருந்தாா்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT