மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினருக்கு குடிப்பதற்காக பிரதமர் மோடி நீர் கொடுத்த விடியோ வைரலாகி வருகிறது.
மக்களவையில் நேற்று (ஜூலை 02) குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. தீர்மானத்தில் பிரதமர் மோடி 2 மணிநேரம் 15 நிமிடங்கள் வரையில் பதிலுரை ஆற்றினார்.
பிரதமரின் பதிலுரையின் போது, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் கோஷங்களை எழுப்பிக்கொண்டு, கடும் அமளியில் ஈடுபட்டனர். அதாவது, எதிர்க்கட்சியினர் மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், பிரதமர் மோடி பதிலுரை ஆற்றும்போது, அவருக்கு அருகில் கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்ட சில எதிர்க்கட்சியினருக்கு குடிப்பதற்கு நீரும் கொடுத்துள்ளார். பிரதமர் மோடி எதிர்க்கட்சியினருக்கு நீர் கொடுக்கும் விடியோவினை பாஜக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி ஆற்றிய பதிலுரையில் கூறியதாவது, ``2024 தேர்தலில் காங்கிரஸுக்கு நாட்டு மக்கள் ஓர் ஆணையை வழங்கியுள்ளனர். அது என்னவென்றால், பதிலளிப்பதற்கு வார்த்தைகள் இல்லாதபோது, அமளியில் ஈடுபட வேண்டும் என்பதுதான்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.