மாநிலங்களவையில் பிரதமர் மோடி. 
இந்தியா

“என்னைப் பேசவிடுங்கள்”.. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பிரதமர் மோடி உரை!

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றிவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்ததைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றிவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (பிப்.5) காலை நிறைவேற்றப்பட்டது.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு பதிலுரை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக பிரதமர் மோடியின் பதிலுரை நேற்று ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று காலை நாடாளுமன்றம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அமளிக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு நடத்தி அவைத் தலைவர் ஓம் பிர்லா நிறைவேற்றியுள்ளார். தொடர்ந்து பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அவர் பேச ஆரம்பித்ததும் மாநிலங்களவை எம்பிக்கள் அனைவரும் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதில் அளித்து வரும் நிலையில், அவரது உரையை தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் தொடர் முழக்கமிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அவர் உரையாற்றும்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவை எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றினார். மேலும், “என்னைப் பேச விடுங்கள்..” என அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து தொடர்ந்து உரையாற்றினார்.

எதிர்க்கட்சிகள் அமளியால் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் நேற்று (பிப்.5) மோடி பேசாத நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசி வருகிறார்.

பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றிய நிலையில், கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக, இன்று காலை மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைசியாக 2004 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பிரதமரின் பதிலுரை இல்லாமலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்! - சுகாதார அமைச்சகம் தகவல்!

ரசிக்க வைக்கும் தாய் கிழவி முதல் பாடல்!

கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் புதிய படம்?

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! | DMK | TNGovt

ஓடிடியில் பராசக்தி! இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT