பிரதமர் மோடியுடன் ரோஜர் பின்னி (இடது), ஜெய் ஷா (வலது) படம் | பிசிசிஐ எக்ஸ்
இந்தியா

பிரதமர் மோடிக்கு ‘நமோ 1’ என்ற ஜெர்சியை பரிசளித்த பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கியுள்ளது.

DIN

உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கடந்த சனிக்கிழமை பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது.

தில்லி விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு வரவேற்பளித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் நேரில் சந்தித்தனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ரோஜர் பின்னி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அகியோர் இணைந்து பிரதமர் மோடிக்கு ‘நமோ 1’ என்ற இந்திய அணியின் ஜெர்சியை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “உங்களது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும், இந்திய அணிக்கு நீங்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..ஜெய்ஹிந்த்..!” எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம் காத்திருப்பு... அனந்திகா சனில்குமார்!

ராஜஸ்தானில் தொடரும் கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

நடிகை, எழுத்தாளருக்கு பாலியல் தொல்லை! கேரள காங்கிரஸ் எம்எல்ஏ இடைநீக்கம்!

ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை!

சிபில் ஸ்கோர் அவசியமில்லை.. வங்கிகளுக்கு ஆர்பிஐ சொல்லும் அறிவுரை

SCROLL FOR NEXT