முகப்பு
இந்தியா

வேலைவாய்ப்பு அளிக்கும் ராடிசன் குழுமம்!

ராடிசன் ரிசார்ட் ஹட்காட் சபுதாரா தொடங்கப்படுவதன் மூலம் மகாராஷ்டிர பொருளாதார நிலை வாய்ப்புகள் இருப்பதாக தகவல்

Updated On : 4 ஜூலை, 2024 at 12:29 PM
பகிர்:

ராடிசன் ஹோட்டல் குழுமம் மகாராஷ்டிரத்தில் உலகத்தரத்தில் புதியதாக ஹோட்டலை நிறுவியுள்ளது.

ராடிசன் ஹோட்டல் குழுமம் மகாராஷ்டிரத்தில் ராடிசன் ரிசார்ட் ஹட்காட் சபுதாராவை புதிதாகத் தொடங்குகிறது. இதன்மூலம் பலருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், மகாராஷ்டிரத்தின் பொருளாதார நிலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராடிசன் குழுமத்தின் இயக்குநர் தெரிவிப்பதாவது, ``நகரத்தின் மறைக்கப்பட்ட அழகை வெளிப்படுத்துவதற்கு ராடிசன் ஹோட்டல் உதவும். அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் மறக்கமுடியாத விருந்தோம்பலையும் அனுபவங்களையும் விருந்தினர்களுக்கு அளிக்கும்” என்று கூறியுள்ளார்.

குஜராத் மற்றும் மகாராஷ்டிர எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஹட்காட் நகரில் ராடிசன் ஹட்காட் சபுதாரா அமைந்துள்ளது. இது 103 அறைகளைக் கொண்டுள்ளது. இந்த ஹோட்டலில் 43,000+ சதுர மீட்டர் பரப்பளவில் விருந்துகள், திருமணங்கள் போன்ற கொண்டாட்டங்களுக்கு ஏற்ற வளாகங்கள், வணிக செயல்பாடுகளுக்கான அரங்குகள் போன்ற ஒரு தனித்துவமான உயர்தரமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரேடிசன் ஹோட்டல் குழுமம் இந்தியாவில் 180-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை செயல்படுத்தி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →