பாராட்டு ‘மழை’ யில் மும்பை வான்கடே மைதானம்...வெற்றி ஊர்வலம் நடைபெறுமா..?
மும்பை வான்கடே மைதானத்தில் மழை பெய்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது.
உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், மும்பையில் வெற்றி ஊர்வலம் செல்ல இருந்தனர்.
மும்பை வான்கடே மைதானப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால், கிரிகெட் வீரர்களின் வெற்றி ஊர்வலம் நடைபெறுமா..? என்ற கேள்வியெழுந்துள்ளது.
தற்போது மழை குறைந்துள்ளதாகவும், வெற்றி ஊர்வல அணிவகுப்பு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.