முகப்பு
தீவிபத்து ஏற்பட்ட கடை.
இந்தியா

கேரளம்: டீக்கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து

கேரளத்தில் டீக்கடையில் சிலிண்டர் வெடித்து ஒருவருக்கு காயம்

இந்தியா

கேரளம்: டீக்கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து

கேரளத்தில் டீக்கடையில் சிலிண்டர் வெடித்து ஒருவருக்கு காயம்

Updated On : 5 ஜூலை, 2024 at 10:37 AM
தீவிபத்து ஏற்பட்ட கடை.
பகிர்:

கேரளத்தில் டீ கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இன்று காலை 7 மணியளவில் டீக்கடையை திறந்து அடுப்பை பற்ற வைத்த போது எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது.

தீயணைப்புப் படையின் துரித நடவடிக்கையால் பக்கத்து கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

எனினும், வெடிவிபத்தில் சாலையின் குறுக்கே இருந்த கடையின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.

இந்த வெடிவிபத்தால் டீகடை முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் மலப்புரத்தைச் சேர்ந்த தொழிலாளி காயமடைந்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மற்றொரு தொழிலாளி, வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர், காயமின்றி தப்பினார். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →