கோப்புப் படம் 
இந்தியா

சூரத்: கட்டடம் இடிந்து 7 பேர் பலி; மேலும் உயரலாம் அச்சம்!

சூரத்தில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

சூரத்தில் கட்டடம் இடிந்ததில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்துவரும் கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில், அந்தக் கட்டடத்தில் வசித்து வந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரவுப்பணி முடித்துவிட்டு, பகல்வேளையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. பகல்வேளையில் பெரும்பாலானோர், வேலைக்குச் சென்றிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரையில், 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டடத்தில் வசித்து வந்த பெரும்பாலானோர், பகல்வேளையில் வேலைக்குச் செல்பவர்களாய் இருந்ததால், உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த திக்வேஷ் ரதி: சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ராணா!

முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜக்தீப் தன்கர் விண்ணப்பம்!

ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

SCROLL FOR NEXT