முகப்பு
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா
இந்தியா

வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்! உயிரிழப்பு 58 ஆக உயர்வு

அஸ்ஸாமில் வெள்ளத்தால் 24 லட்சம் மக்கள் பாதிப்பு!

இந்தியா

வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்! உயிரிழப்பு 58 ஆக உயர்வு

அஸ்ஸாமில் வெள்ளத்தால் 24 லட்சம் மக்கள் பாதிப்பு!

Updated On : 7 ஜூலை, 2024 at 6:35 AM
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா
பகிர்:

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சுமார் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீா் பாய்ந்து வருகிறது.

சனிக்கிழமை(ஜூலை 6) மேலும் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

மழை வெள்ளத்தால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள தூப்ரி மாவட்டத்தில் மட்டும் 7.97 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 29 மாவட்டங்களில் 23.96 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக 27 மாவட்டங்களில் 577 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 5.26 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திப்ரூகர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 3,535 கிராமங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. சுமார் 68,768.5 ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 15.49 லட்சம் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. காஸிரங்கா தேசியப் பூங்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 114 விலங்குகள் வெள்ளத்தில் மூழ்கி மாண்டுள்ளன. அங்கு மொத்தமுள்ள 233 வன முகாம்களில் 66 வன முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →