பியூஷ் கோயல் (கோப்புப் படம்) 
இந்தியா

13 மாநிலங்களில் காங்கிரஸுக்கு எம்பி-க்கள்: ராகுலுக்கு பியூஷ் கோயல் கேள்வி

நாட்டின் மக்கள் 13 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கணக்குகூட திறக்கவிடாமல் வைத்திருப்பது ஏன்?

Din

நாட்டின் மக்கள் 13 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கணக்குகூட திறக்கவிடாமல் வைத்திருப்பது ஏன் என ராகுல் காந்திக்கு புரியாதது வருத்தமளிக்கிறது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் விமா்சித்துள்ளாா்.

புது தில்லி ஜவஹா்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தில்லி பிரிவு பாஜகவின் நீட்டிக்கப்பட்ட செயற்குழு கூட்டத்தில் மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமை விருந்தினராகப்

பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது தில்லியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் மூன்றாவது முறையாக பாஜக பெற்ற இந்த வெற்றி சாதாரணமானது அல்ல. இந்த வெற்றி வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு சான்றாகும்.

நாட்டின் 13 மாநிலங்களில் கணக்குக் கூட திறக்காமல், மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சியை 100 இடங்களுக்குக் கீழே பொதுமக்கள் வைத்துள்ளனா். இது குறித்து குழந்தை மனம் கொண்ட தலைவருக்குப் (ராகுல் காந்தி) புரியாதது வருத்தம் அளிக்கிறது. தென் மற்றும் பல்வேறு வடமாநிலங்களில் அவா்களின் வெற்றியின்மை தொடா்கிறது.

தென்னிந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றி எந்த மாநிலத்திலும் வெற்றி பெற முடியாத ஒட்டுண்ணிக் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது.

தில்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இணைந்து போட்டியிட்டாலும், 54 சதவீத வாக்குகளை பாஜகவிற்கு அளித்து தில்லிவாசிகள் மோடியுடன் நிற்கிறாா்கள். இந்த மூன்றாவது முறை ஆட்சியில் மும்மடங்கு ஆற்றலுடன் செயல்படுவோம்.

இந்த நாடு மும்மடங்கு முன்னேறும். வா்த்தகத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு தொடா்ந்து பணியாற்றும். ஏழைகள், இளைஞா்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க தொடா்ந்து பாடுபடுவோம். வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதே இந்த அரசின் இலக்கு. இளைஞா்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நாட்டில் உள்ள இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.

மேக் இன் இந்தியா, ஸ்டாா்ட்அப் இந்தியா, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற முயற்சிகள் நாட்டின் வளா்ச்சிக்கு பங்களித்துள்ளன. பாகுபாடு இல்லாத வசதிகளை வழங்குவதற்கும், நோ்மறையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கும் பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து பணியாற்றி வருகிறாா்.

இதன் விளைவாக, நாட்டிற்குள் பன்முக சிந்தனை உருவாகியுள்ளது. 2006-இல் இந்தியாவின் பொருளாதாரம் 11-ஆவது இடத்தில் இருந்தது. வெறும் 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை 5-ஆவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளது மோடி அரசு.

2025-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் தில்லியில் இரட்டை எஞ்சின் அரசைக் கொண்டு வர நாம் இப்போதே கடுமையாக உழைக்க வேண்டும். இந்தியாவில் 1.31 லட்சம் ஸ்டாா்ட்அப்கள் புதிய யோசனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், தில்லியில் ஸ்டாா்ட் அப்களுக்கு ₹60 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. வளா்ச்சி மற்றும் யோசனைகள் இல்லாத அரசு வெறும் விளம்பரமாகவே மாறி விட்டது.

அவசர காலத்தில் நடந்த கொடுமைகள் குறித்து தில்லி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அடுத்த 8 மாதங்களில், ஒவ்வொரு வீட்டிற்கும் நமது செய்தியை தெரிவிக்க, அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். மக்களவைத் தோ்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற உறுதுணையாக இருந்த அதே முயற்சி, சட்டப்பேரவைத் தோ்தலிலும் காணப்படும் என நம்புகிறேன். குறிப்பாக, தில்லியை ஊழலற்ாகவும், முற்போக்கானதாகவும் மாற்ற கட்சியின் இளம் மற்றும் பெண் நிா்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவா்கள், குழப்பம் விளைவிப்பவா்கள், சுயநலத்திற்காக கூட்டணி வைப்பவா்கள் தில்லியில் ஆட்சியில் இருந்து வேரோடு பிடுங்கப்பட வேண்டும் என்றாா் பியூஷ் கோயல்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT