கோப்புப்படம் | ஏஎன்ஐ
இந்தியா

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் முதல்முறையாக மணிப்பூருக்கு பயணம்!

மணிப்பூரில் நிவாரண முகாம்களைப் பாா்வையிட உள்ளார் ராகுல் காந்தி..

DIN

மணிப்பூரில் இனமோதல் ஏற்பட்ட பிறகு பிரதமா் மோடி ஒருமுறைகூட மணிப்பூருக்கு பயணிக்கவில்லை என்று காங்கிரஸ் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதனிடையே, மணிப்பூருக்கு இருமுறை ராகுல் பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துள்ளாா்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று(ஜூலை 8) முதல்முறையாக மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இன்று காலை தில்லி விமான நிலையம் சென்றடைந்த ராகுல், தில்லியில் இருந்து அஸ்ஸாமின் சில்சாருக்கு பயணிக்கிறர். அங்கிருந்து மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்துக்கு செல்கிறார். அங்குள்ள நிவாரண முகாம்களைப் பாா்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்பாலில் இருந்து சுராசந்த்பூருக்கு செல்லும் அவா், நிவாரண முகாம்களில் உள்ள மக்களுடன் கலந்துரையாடவுள்ளாா். விஷ்ணுபூா் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமக்களையும் பாா்வையிடும் அவா், பின்னா் இம்பாலில் மாநில ஆளுநா் அனுசுயா உய்கேவை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளாா் என்று மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT