பாஜக அமைச்சர் ராம்நிவாஸ் ராவத்தின் பதவியேற்பில் தவறான உச்சரிப்பால் குழப்பம் ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த ராம்நிவாஸ் ராவத், இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சராகப் பதவியேற்றிருந்தார். ஆனால், பதவியேற்பின்போது, ராம்நிவாஸ் அமைச்சர் பதவியைத் தவறாகப் படித்ததால், ராம்நிவாஸ் இணையமைச்சரா? அல்லது கேபினெட் அமைச்சரா? என்ற குழப்பம் எழுந்தது.
இதனையடுத்து, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில், ராம்நிவாஸ் மீண்டும் கேபினெட் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ராம்நிவாஸுக்கு முதல்வர் மோகன் யாதவ் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்மூலம், ராம்நிவாஸ் ஒரேநாளில் இரண்டு முறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
மேலும், ராம்நிவாஸ் காங்கிரஸில் இருந்து பாஜகவில் கடந்த ஏப்ரல் மாதம் இணைந்தார். இருப்பினும், அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியை இன்னும் ராஜிநாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.