அயன் பட பாணியில் வயிற்றுக்குள் ரூ. 13 கோடி கொக்கைன் கடத்தியவர் கைது!
அயன் பட பாணியில் வயிற்றுக்குள் வைத்து கொக்கைன் கடத்திய கென்யாவைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரளத்தில் கொச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 13 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்த முயன்ற கென்யாவைச் சேர்ந்த ஒருவரை வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் கைது செய்துள்ளது.
இதுகுறித்து வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் கூறுகையில், “குற்றவாளியின் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிராம் கொக்கைன் குளிகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து திங்களன்று அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை சோதனை செய்ததில் அவரது சூட்கேசில் இருந்த மதுபான பாட்டிலில் இருந்தும் சுமார் 1,100 கிராம் கொக்கைன் திரவ வடிவில் மீட்கப்பட்டுள்ளது. கேரளத்தில் திரவ வடிவில் உள்ள கொக்கைன் போதைப்பொருள் பிடிபடுவது இதுவே முதல்முறையாகும்.
Advertisement
Advertisement
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.13 கோடிக்கு மேல் இருக்கும்” எனத் தெரிவித்தனர்.
சூரியா நடித்த அயன் திரைப்படத்திலும் வயிற்றில் குளிகைகள் மூலம் போதைப்பொருள் கடத்திவருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.