முகப்பு
இந்தியா

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள்!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

Updated On : 10 ஜூலை, 2024 at 9:49 AM
படம் | ஏஎன்ஐ
பகிர்:

ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய எம்எல்ஏ கர்தார் சிங் தன்வார், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் ஆனந்த் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆனந்த், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.

கலால் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதையடுத்து கர்தார் சிங் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

படேல் நகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான தனது மனைவி வீணா ஆனந்துடன் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

கர்தார் சிங் தன்வார் சத்தர்பூரில் உள்ள ஃபதேபூர் பெரியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் 2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேருவதற்கு முன்பு, அவர் பாரதிய ஜனதா கட்சியில் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →