இந்தியா

``அவர் எப்போதும் அனைவரின் காலிலும் விழ தயாராக இருக்கிறார்": தேஜஸ்வி யாதவ்

தனியார் அதிகாரியின் காலில் விழுகச் சென்ற நிதிஷ் குமார் யாதவ்

DIN

பிகாரில் நடந்த விழாவில் நிதிஷ் குமார் தனியார் நிறுவன அதிகாரியிடம் நடந்துகொண்ட செயல் விடியோ வைரலாகி வருகிறது.

பிகாரில் `ஜே.பி. கங்கா பாதை’ என்ற பெயரில் பொதுமக்களுக்கு விரைவுச் சாலையை அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி மற்றும் உள்ளூர் எம்.பி.க்களும் கலந்து பங்கேற்றிருந்தனர்.

இந்த விழாவின் போது நிதிஷ் குமார், சாலை அமைக்கும் பணியின் தனியார் நிறுவன ஒப்பந்ததார அதிகாரியிடம் இந்தாண்டு இறுதிக்குள் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், அவர் ``நீங்கள் விரும்பினால் உங்கள் பாதங்களைத் தொடுவேன்” என்று கூறி, கைகளால் வணங்கியும் உள்ளார்.

பிகார் முதல்வரின் இந்த செயலைக் கண்ட அதிகாரி, ``வேண்டாம்” என்று கூறி அவரைத் தடுத்துள்ளார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ``முதல்வர் சக்தியற்றவர்; அதனால்தான் அவர் எப்போதும் அனைவரின் காலிலும் விழ தயாராக இருக்கிறார்” என்று கூறி விடியோ வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT