இந்தியா

ஸ்மிருதி இரானி உள்பட எந்தவொரு தலைவரையும் அவமதிக்கக் கூடாது -ராகுல் அறிவுறுத்தல்

அமேதியில் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானியை அவமதிக்கக் கூடாது -ராகுல் அறிவுறுத்தல்

DIN

மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்திலுள்ள அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோல்வியடைந்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து அமேதியிலும் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில், சமீபத்தில் முடிவடைந்துள்ள மக்களவை தேர்தலில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து களமிறக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் கிஷோரி லால் ஷர்மா 1.60 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பெருவெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்த தோல்வி ஸ்மிருதி இரானிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் மீதான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்தக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் நிகழ்வது சகஜம். இந்த நிலையில், ஸ்மிருதி இரானி குறித்து அவதூறான கருத்துக்களை பயன்படுத்தக் கூடாது என்றும், அதேபோல எந்தவொரு அரசியல் தலைவர் மீதும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்கக் கூடாது என அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

மனிதர்களை அவமதிப்பது பலவீனத்தின் அடையாளமே தவிர, வலிமையின் அடையாளம் அல்ல என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT