முகப்பு
இந்தியா

மழையால் தத்தளிக்கும் மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

மழையால் தத்தளிக்கும் மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்

Updated On : 12 ஜூலை, 2024 at 4:31 AM
மகாராஷ்டிரத்தில் கனமழை. மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
பகிர்:

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து, பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கும் வேளையில், மும்பைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் மும்பையில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழைக் காலம் தொடங்கியிருப்பது மட்டும் மும்பைக்கு மேலே காற்றழுத்த சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக காற்றுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை என்பது, வானிலை மிக மோசமாக இருக்கும் என்பதை அறிவுறுத்துகிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

ஏற்கனவே, பெய்து வரும் மழை காரணமாக, மும்பையின் கிங்ஸ் சர்க்கிள் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் நவி மும்பையில் பெய்த மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

தொடர்ந்து, தாணே மற்றும் ராய்காடு பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →