வாக்கு எண்ணும் மையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுப்தே பாண்டேவின் மகள் ஸ்ரேயா பாண்டே ஏ.என்.ஐ.
இந்தியா

13 தொகுதி இடைத்தேர்தல் முடிவு: காங்., - 4, திரிணமூல் - 4 தொகுதிகளில் வெற்றி!

7 மாநிலங்களில் காலியான இருந்த 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி

DIN

7 மாநிலங்களில் காலியான இருந்த 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

பிகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த புதன்கிழமை(ஜூலை 10) நடந்து முடிந்தது.

இத்தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (ஜூலை 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பகத், பாஜக வேட்பாளர் ஷீதல் அங்கூரைவிட 37,325 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பாஜக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்.

பிகார்

பிகார் மாநிலத்தின் ரூபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஷங்கர் சிங் வெற்றி பெற்றார்.

ஹிமாசலப் பிரதேசம்

ஹிமாசலப் பிரதேச மாநிலம் டேஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கமலேஷ் தாக்குர் வெற்றி பெற்றார்.

ஹமீர்பூர் தொகுதியில் பாஜகவின் ஆஷிஷ் சர்மா வெற்றி பெற்றார்.

நலகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஹர்தீப் சிங் பாவா வெற்றி பெற்றார்.

மத்தியப் பிரதேசம்

அமர்வாரா தொகுதியில் பாஜக வேட்பாளர் கமலேஷ் பிரதாப் வெற்றி பெற்றார்.

பஞ்சாப்

மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மொஹிந்தர் பகத் வெற்றி பெற்றார்.

உத்தரகண்ட்

பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் லக்கபாட் சிங் புடோலோ வெற்றி பெற்றார்.

மங்களூர் தொகுதியில் காங்கிரஸின் முகமது நிஜாமுதீன் வெற்றி பெற்றார்.

மேற்கு வங்கம்

பாக்தா தொகுதியில் திரிணமூல் காங்கிரஸின் மதுபர்னா தாக்குர் வெற்றி பெற்றார்.

ராய்கஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ண கல்யாணி வெற்றி பெற்றார்.

மணிக்தலா தொகுதியில் திரிணமூல் காங்கிரஸின் சுப்தி பாண்டே வென்றார்.

ரனாகாட் தக்ஷின் தொகுதியில் முகுத் மணி அதிகாரி வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

SCROLL FOR NEXT