ஜெய் ராம் தாக்குர்  கோப்புப் படம்
இந்தியா

இடைத்தேர்தல் முடிவு: மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் - பாஜக

மக்களின் தீர்ப்பை ஏற்பதாக மாநில முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் தெரிவித்தார்.

DIN

ஹிமாசலப் பிரதேசத்தில் 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒன்றில் மட்டுமே பாஜக அரசு வெற்றி பெற்றது. மற்ற இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றியைப் பதிவு செய்தது.

இதனிடையே மக்களின் தீர்ப்பை ஏற்பதாக மாநில முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் மக்களின் ஆணையை ஏற்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தில் மக்கள் நலன் சார்ந்த போராட்டத்தை சட்டப்பேரவையில் தொடர்ந்து முன்னிருத்துவோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததை அடுத்து அவர்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜிநாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதையடுத்து, ஹமிர்பூர், நலகர் மற்றும் டேரா ஆகிய பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தொகுதியில் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

காங்க்ரா மாவட்டத்தின் டேஹ்ரா பகுதியில், காங்கிரஸ் சார்பில் கமலேஷ் தாக்குர் (53), பாஜக வேட்பாளர் ஹோஷ்யார் சிங் (57). இதில் கலமேஷ் தாக்குர் 9399 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். இவர் 32,737 வாக்குகள் பெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட ஹோஷ்யார் சிங் 23,338 வாக்குகளை பெற்றார்.

ஹமிர்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆஷிஷ் சர்மா (37),காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் புஷ்பிந்தர் வர்மா (48) போட்டியிட்டனர். இதில் ஆஷிஷ் சர்மா 1571 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். இவர் 27041 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

நலகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பாவா (44), பாஜக வேட்பாளர் கேஎல் தாக்கூர் (64). இதில் ஹர்தீப் சிங் பாவா 8990 அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவர் 34608 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கேஎல் தாக்கூர் 25618 வாக்குகளைப் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

தமிழகத்தில் நிறையும் குறையும் நிறைந்த ஆட்சி: பிரேமலதா விஜயகாந்த்

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னையில் சமரசமில்லை! ஜி. ராமகிருஷ்ணன்

பொன்னமராவதியில் கோகுலாஷ்டமி விழா

SCROLL FOR NEXT