முகப்பு
இந்தியா

மணிப்பூா்: பாதுகாப்புப் படையினருக்கு பழங்குடியின கூட்டமைப்பு கண்டனம்: அமித் ஷாவுக்கு கடிதம்

பைடோல் மற்றும் எல் ஹெங்ஜோல் கிராமங்களில் கடந்த ஜூலை 8, 9 தேதிகளில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் நடவடிக்கை

Updated On : 13 ஜூலை, 2024 at 7:59 PM
அமித் ஷா
பகிர்:

மணிப்பூரில் மத்திய பாதுகாப்புப் படையினா் நடத்தி வரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து மணிப்பூா் பழங்குடியின தலைவா்கள் கூட்டமைப்பு (ஐடிஎல்எஃப்) மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு சனிக்கிழமை கடிதம் எழுதியது.

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைடோல் மற்றும் எல் ஹெங்ஜோல் கிராமங்களில் கடந்த ஜூலை 8, 9 தேதிகளில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா். இதில் 3 போராளிகள் கைது செய்யப்பட்டதுடன் 1300 தோட்டாக்களுடன் ஏகே ரக துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைகளைத் தொடா்ந்து ஐடிஎல்எஃப் இந்த குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது.

ஐடிஎல்எஃப் எழுதியுள்ள கடிதத்தில், ‘மணிப்பூரின் ஜிரிபாம் பகுதியில் உள்ள பைடோல் மற்றும் மோங்கபங் கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் 7 குகி பழங்குடி பெண்களைத் தாக்கியதுடன் 2 கிராம இளைஞா்களை காவலில் வைத்துள்ளது.

மேலும், குகி பழங்குடியின அமைப்பின் பொதுச் செயலாளா் வீட்டுக்கு தீ வைத்ததுடன் 5 குகி பழங்குடி பெண்களைத் தாக்கியதில் அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

சமூக தலைவா்களின் குடியிருப்புகளுக்கு தீ வைத்ததுடன் குகி-ஸோ தன்னாா்வலா்களை கைது செய்தது உள்ளூா் மக்களிடையே பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மக்கள் ஆதரவை பெறுவதற்காக வதந்திகளைப் பரப்புவதை முதல்வா் பிரேன் சிங் நிறுத்திவிட்டு சமாதான பேச்சுவாா்த்தைகளில் சமூக தலைவா்களுக்கு இடமளிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →