மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கௌரவ் கோகோய் தேர்வு! 
இந்தியா

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கௌரவ் கோகோய் தேர்வு!

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கௌரவ் கோகோய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கெளரவ் கோகோய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர், தலைமைக் கொறடா மற்றும் 2 கொறடாக்கள் நியமனங்கள் தொடர்பான கடிதத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி அனுப்பியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

"கௌரவ் கோகோய் நாடாளுமன்றத்தின் கீழவையில்(மக்களவை) கட்சியின் துணைத் தலைவராக இருப்பார், எட்டு முறை எம்.பி.யான கேரளத்தின் கொடிக்குன்னில் சுரேஷ் கட்சியின் தலைமைக் கொறடாவாக இருப்பார், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் கிஷன்கஞ்ச் எம்.பி. முகமது ஜாவேத் மக்களவையில் கட்சியின் கொறடாக்களாக இருப்பார்கள்.

காங்கிரஸ் மற்றும் இந்தியாக் கூட்டணி கட்சிகள் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் பேரில் மக்களவையில் மக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்" என்று கே.சி. வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT