முகப்பு
இந்தியா

எல்லை ஊடுருவிய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

எல்லைக் கட்டுபாட்டுக் கோடு பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Updated On : 14 ஜூலை, 2024 at 8:55 PM
கோப்புப் படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் கேரான் மாவட்டத்தில் பாகிஸ்தானையொட்டிய எல்லைக் கட்டுபாட்டுக் கோடு பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கேரான் செக்டாரில் அமைந்த எல்லைக் கட்டுபாட்டுக் கோடு சா்வேதேச எல்லைப்பகுதியில் ஸ்ரீநகரைத் தளமாகக் கொண்ட சினாா் படைப்பிரிவினா் மேற்கொண்ட ஊடுருவல் முறியடிப்பு நடவடிக்கையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →