முகப்பு
இந்தியா

திருமணத்திற்கு சென்றவர்கள் மின்சாரம் தாக்கி பலி!

இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு பேர் பலி

Updated On : 15 ஜூலை, 2024 at 10:40 AM
பகிர்:

ஜார்க்கண்டில் திருமணத்திற்கு சென்ற பேருந்து விபத்துள்ளானதால் நான்கு பேர் பலியாகினர்.

ஜார்க்கண்டின் தமாரில் உள்ள சோககுட்டு கிராமத்தில் நடக்கவிருந்த திருமணத்திற்கு சுமார் 90 பேர் பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது, பேருந்தின் இருக்கைகள் முழுதும் நிரப்பப்பட்டதால், சிலர் பேருந்தின் கூரை மேல் அமர்ந்து பயணித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பேருந்து சென்ற வழியில் இருந்த உயரழுத்த மின்கம்பியில் எதிர்பாராத விதமாக உரசியுள்ளது. இதனால், பேருந்தின் கூரை மேல் பயணித்த 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், உடன் பயணித்த பலரும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, பேருந்தில் பயணித்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →