ஜார்க்கண்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர் அடித்துக் கொலை: 4 பேர் கைது!
மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக..
ஜார்க்கண்டில் சத்ரா மாவட்டத்தில் குழந்தை கடத்துபவர் என்ற சந்தேகத்தின்பேரில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபர்வார் காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஞாயிறன்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிராயடட்டாண்ட் மற்றும் கிச்சோ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ராம்கர் மாவட்டத்தில் உள்ள பர்வடோலியைச் சேர்ந்த ரம்பாலி ராஜ்வார் என்பவரை அடித்துக் கொன்றனர். இவர் பலத்த காயமடைந்த நிலையில் திங்களன்று உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. குழந்தை கடத்த வந்தவர் என்று நினைத்து மக்கள் அனைவரும் அவரை அடித்துக் கொன்றுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
விடியோ காட்சிகளின் அடிப்படையில் முதல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என எஸ்பி சுமித் குமார் அகர்வால் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் பிரயாக் மஹ்தோ (40), மகேந்திர மஹ்தோ என்கிற தருண் மஹ்தோ (28), சுரேந்திர மஹ்தோ (32), மற்றும் பசந்த் முண்டா (25) ஆகியோர் ஆவர்.
இறந்தவரின் சகோதரர் புவனேஷ்வர் ராஜ்வாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.
புவனேஷ்வர் தனது சகோதரர் சிறிது காலமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.
Four persons were arrested for allegedly beating a 40-year-old mentally challenged man to death in Jharkhand's Chatra district, suspecting him to be a "child lifter", police said on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.