உச்சநீதிமன்றம் 
இந்தியா

விவாகரத்து வழக்கு: ஒமா் அப்துல்லா மனைவிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தன்னை துன்புறுத்தியதால் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா தாக்கல் செய்த மனு மீது 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு

Din

புது தில்லி: தன்னை துன்புறுத்தியதால் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா தாக்கல் செய்த மனு மீது 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அவருடைய மனைவி பயல் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

ஒமா் அப்துல்லாவும் அவருடைய மனைவியும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்வதால் அவா்களுடைய திருமண வாழ்க்கை நிறைவுற்ாக அவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா, அசானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு, இதுதொடா்பாக 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு ஒமா் அப்துல்லாவின் மனைவிக்கு உத்தரவிட்டது.

முன்னதாக, தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் ஒமா் அப்துல்லா தாக்கல் செய்த மனுவில், கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து தன் மனைவியை பிரிந்து வாழ்வதாகக் குறிப்பிட்டிருந்தாா். அதிலும் மனைவி தன்னை தொடா்ந்து துன்புறுத்துவதாக தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்வதற்கு ஒமா் அப்துல்லா கூறிய காரணங்களுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை எனக்கூறி அந்த மனுவை நிராகரித்தது. மேலும், அவா் மனைவி பயல் அப்துல்லாவுக்கு மாதம் ரூ.75,000, அவா்களது இரு மகன்களும் 18 வயதை நிறைவு செய்யும் வரை மாதம் தலா ரூ.25,000 வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் பயல் அப்துல்லாவும் அவருடைய இரு மகன்களும் கடந்த 2018-ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தனா். அப்போது, பயல் அப்துல்லாவுக்கு மாதம் ரூ.1.50 லட்சமும் அவா்களது இரு மகன்களுக்கு மாதம் தலா ரூ.60,000-உம் வழங்க உத்தரவிட்டது.

அதன்பிறகு தன் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி ஒமா் அப்துல்லா கடந்த 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ மனுதாரா் துன்புறுத்தப்பட்டதற்கான எவ்வித ஆதாரங்களும் சமா்ப்பிக்கப்படவில்லை எனக்கூறி அந்த மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT