கோப்புப் படம் 
இந்தியா

ஆபாச விடியோவால் சிறுமி பாலியல் வன்கொடுமை!

ஆந்திரத்தில் ஆபாச விடியோ பார்த்த 3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்

DIN

ஆந்திரத்தில் சிறுவர்கள் ஆபாச விடியோ பார்த்து பாதிப்படைந்து ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமி, திடீரென காணாமல் போய்விட்டதாக சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் கடந்த ஜூலை 7ஆம் தேதியில் புகார் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சிறுமியைத் தேடத் தொடங்கினர். பின்னர், சிறுமியின் உடல் இறந்த நிலையில், கால்வாய் அருகே இருப்பதைக் கண்டு, சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமியின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. இறுதியாக, மோப்பநாயை சிறுமியின் உடல் இருந்த கால்வாய் அருகே கூட்டிச் சென்றபோது, நாய் மோப்பம் பிடித்துக் கொண்டு, 3 சிறுவர்களின் வீட்டுக்குச் சென்றுள்ளது.

அந்த 3 சிறுவர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில், சிறுவர்கள் தான் சிறுமியைக் கொலை செய்தனர் என்பது தெரிய வந்தது. அவர்களில் 12 வயதான ஆறாம் வகுப்பு மாணவர்கள் இருவரும், மற்றும் 13 வயதான ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரும் அடங்குவர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சிறுவர்கள் தங்களது வீட்டில் மொபைல் போனில் ஆபாச விடியோக்களைப் பார்த்துள்ளனர். அந்த தாக்கத்தால் சிறுவர்கள் பாதிப்படைந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தங்களுடன் விளையாட வருமாறு அழைத்த சிறுவர்கள், ஒரு கோயிலினுள் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை, வெளியில் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக சிறுமியைக் கொலை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுவர்கள், நடந்த அனைத்தையும் அவர்களின் தந்தையிடமும் குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளனர். இதனால், சிறுவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்ற அச்சத்தில் சிறுவர்களின் தந்தை சம்பவ இடத்திற்குச் சென்று, சிறுமியின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, சிறுமியின் உடலில் கல்லைக் கட்டி, கால்வாயில் தூக்கி எறிந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, 3 சிறுவர்களும் அவர்களது தந்தையும் ஜூலை 10ஆம் தேதியில் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT