கோப்புப் புலி.  
இந்தியா

ரயில் மோதி காயமடைந்த புலிக்குட்டிகள்: சிகிச்சைக்கு செல்ல சிறப்பு ரயில்

மத்திய பிரதேசத்தின் செஹோா் மாவட்டத்தில் ரயில் மோதி காயமடைந்த 2 புலிகுட்டிகளை சிகிச்சைக்கு கொண்டுசெல்ல குளிா்சாதன வசதியுள்ள ஒரு பெட்டி மட்டும் இணைக்கப்பட்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

Din

போபாலில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இப்பகுதிக்கு காயமடைந்த குட்டிகளை மீட்க மேற்கு மத்திய ரயில்வே (டபிள்யுசிஆா்) சிறப்பு ரயிலை இயக்கியது.

மத்திய பிரதேசத்தின் செஹோா் மாவட்டத்தில் உள்ள மிட்காட் வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலில் மோதி 3 புலிக்குட்டிகள் காயமடைந்தன. இதில் ஒன்பது மாத ஆண் குட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தது. ரயில் பாதையின் அருகிலுள்ள வாய்க்காலில் 2 பெண் குட்டிகள் விழுந்து சிக்கித் தவித்தன.

தகவலறிந்து விரைந்து வந்த சத்புடா புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவா்கள் அடங்கிய குழு குட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், காயமடைந்த குட்டிகளின் தாய் அவற்றை நெருங்கவிடாமல் தடுத்ததாலும் இருள் சூழ்ந்ததாலும், மீட்புப் பணிகள் தடைப்பட்டது. இரண்டு நாள்கள் நடைபெற்ற மீட்புப் போராட்டத்துக்குப் பிறகு அதிகாரிகள் வெற்றிகரமாக குட்டிகளை மீட்டனா்.

இதையடுத்து, முதல்வா் மோகன் யாதவ் உத்தரவின்படி காயமடைந்த குட்டிகள் குளிா்சாதன வசதியுள்ள ஒரு பெட்டி மட்டும் உள்ள சிறப்பு ரயிலில் போபாலின் ராணி கம்லாபதி ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டு, பின்னா் சிகிச்சைக்காக வான் விஹாா் தேசிய பூங்காவுக்கு மாற்றப்பட்டது.

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

இருமல் மருந்து விவகாரம்: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT