ஆன்வி கம்தார் படம் | ஆன்வி கம்தார் இன்ஸ்டாகிராம்
இந்தியா

மும்பை: ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் பள்ளத்தாக்கில் விழுந்து பலி!

மும்பையில் ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் பள்ளத்தாக்கில் விழுந்து பலியானார்.

DIN

மும்பையில் ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலியானார்.

பயணங்களில் ஈடுபாடு கொண்டவரான 27 வயதான ஆன்வி கம்தார் மும்பையில் உள்ள பள்ளத்தாக்கின் நுனியில் நின்று விடியோ எடுத்தபோது கால் தவறி 300 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக பலியானார்.

மும்பையின் முலுண்ட் பகுதியில் வசித்து வந்த ஆன்வி கம்தார் குளோகல் ஜர்னல் என்ற பெயரில் 2,74,000 க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை கொண்டுள்ளார். பட்டய கணக்காளரான அவர் டிலாய்ட் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ( ஜூலை 16) மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் இருக்கும் மங்கானில் புகழ்பெற்ற கும்பே நீர்வீழ்ச்சியை விடியோ எடுப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

இயற்கை எழில் கொஞ்சும் சூழலை தனது போனில் பதிவு செய்யும் போது பள்ளத்தாக்கில் நுனியில் இருந்து கீழேத் தவறி விழுந்துள்ளார். அவரது நண்பர்கள் தகவல் கொடுத்ததையடுத்து, போலீஸார் மற்றும் உள்ளூர் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ஆன்வியை மீட்டு அருகில் உள்ள மாங்கன் தாலுகா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT