உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விகாஸ் துபே என்பவர் 40 நாள்களில் 7 முறை பாம்பு கடித்ததாகக் கூறிய சம்பவத்தில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
விகாஸ் துபே கூறும்போது, 40 நாள்களில் ஏழு முறை பாம்பு கடியிலிருந்து தப்பியதாகயும், ஊர்வன உயிரிகள் கனவில் தோன்றியதாகவும், அது 9 ஆவது முறையில் தனது உயிரைப் பறிப்பதாகவும் கூறினார்.
மேலும், ஃபதேப்பூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தில் தனது மாமா வீட்டில் இருந்தபோது ஏழாவது முறையாக பாம்பு கடித்து பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.
வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பாம்பு கடிக்கும் என்று கூறிய வினோதமான நிகழ்வால் மருத்துவர்களும் குழப்பமடைந்தனர்.
ஒவ்வொரு முறையும் கடிபடுவதற்கு முன், தனக்கு ஒரு கனவு வருகிறது என்றும் அவர் கூறினார். துபேக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஜவஹர்லால், அவரது வீட்டைவிட்டு வேறு இடத்தில் தங்கும்படி அறிவுறுத்தினார்.
அவரை முதல்முறை பாம்பு கடித்ததால் பயம் ஏற்பட்டு தன்னை அடிக்கடி பாம்பு கடிப்பதாக எண்ணி அச்சப்பட்டுள்ளார். விகாஸ் துபேயின் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக ஃபதேபூர் மாவட்ட ஆட்சியர் தமிழகத்தைச் சேர்ந்தவரான இந்துமதியின் உத்தரவின் பேரில் விசாரணை அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 மருத்துவர் குழுவை தலைமை மருத்துவ அதிகாரி அமைத்தார்.
திங்கள்கிழமை (ஜூலை 15) அன்று, மருத்துவர்கள் ராஜீவ் நயன் கிரி, பிரதீப் ராமன், நைப் தாசில்தார் சிட்டி விஜய் பிரகாஷ் திவாரி, இஷ்டியாக் அகமது, ராஜேந்திர வர்மா, என்கே சக்சேனா ஆகியோர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் விகாஸ் துபேவுக்கு பாம்பு பயம் என்று அறியப்படும் ஓபிடியோபோபியா (ophidiophobia) இருப்பது தெரியவந்துள்ளது.
ஃபதேபூரின் தலைமை சுகாதார அதிகாரியால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஜூலை 16 ஆம் தேதி, சுகாதாரத் துறை வெளியிட்ட தனது அறிக்கையில், ஒரு பாம்பு மட்டுமே அவரை கடித்துள்ளது தெரியவந்துள்ளது.
விகாஸ் துபே ஓபிடியோபோபியாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. விகாஸ் துபே மனநல ரீதியிலாக பாதிக்கப்பட்டிருப்பதால் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.