ஹிமந்த விஸ்வ சா்மா (கோப்புப்படம்) 
இந்தியா

2041-ஆம் ஆண்டுக்குள் அஸ்ஸாம் முஸ்லிம் மாநிலமாகும்: முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா

ராகுல் காந்தியை மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான விளம்பர தூதராக நியமித்தால் முஸ்லிம் மக்கள் தொகை கட்டுப்படும்.

Din

அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு 30 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் 2041-ஆம் ஆண்டுக்குள் அஸ்ஸாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாகும் என மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய அவா், ‘அஸ்ஸாமில் முஸ்லிம் மக்கள் தொகை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவர மாதிரிகளின் படி மாநிலத்தில் தற்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை 40 சதவீதமாகிவிட்டது. ஆனால், ஹிந்து சமூகத்தின் மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு 16 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் 2041-ஆம் ஆண்டுக்குள் அஸ்ஸாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

பெருகிவரும் முஸ்லிம் சமூகத்தின் மக்கள் தொகையைக் குறைக்க அரசாங்கம் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்குள்ளது. முஸ்லிம் சமூகம் ராகுல் காந்தியின் பேச்சை மட்டும் கேட்பதால், அவரை மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான விளம்பர தூதராக நியமித்தால் அது அடங்கிவிடும்’ என்றாா்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT