உத்தரகண்ட்டின் ருத்ரபிரயாக் பகுதியில் இடிந்து விழுந்த பாலம். 
இந்தியா

உத்தரகண்ட்: கட்டுமானப் பணியில் 2 ஆவது முறையாக இடிந்து விழுந்த பாலம்!

உத்தரகண்டில் கட்டுமானப் பணியின் போது பாலம் இடிந்து விழுந்தது.

DIN

உத்தரகண்ட் மாநிலத்தின் அடையாளம் என சொல்லப்படும் ருத்ரபிரயாக் பகுதியில் அமையவுள்ள பாலம் கட்டுமான பணியின்போதே இடிந்து விழுந்தது.

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த பாலம் வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. இந்த விபத்து அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ரூ. 76 கோடி செலவில் 40 மீட்டர் உயரத்தில் 110 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் இந்தப் பாலம், ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடிந்து விழுந்தது. அப்போது 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், எட்டு பேர் காயமடைந்தனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், டெண்டர் ஆர்சிசி இன்ஃப்ராவென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

முன்னதாக இடிந்து விழுந்த சம்பவத்தில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கன்ஹையா குமார், பங்கஜ் குமார் ஆகியோர் பாலத்தின் அடித்தளத்தில் சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

SCROLL FOR NEXT