குவைத்தில் தீவிபத்தில் பலியானோர். 
இந்தியா

குவைத்தில் தீவிபத்து: கேரளத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த மேத்யூ முழக்கல் கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி லினி ஆபிரகாம், செவிலியர் ஆவார்.

இந்த சம்பதிக்கு ஐசக், எரின் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களும் குவைத்தில் படித்து வந்தனர்.

மேத்யூ உள்பட நான்கு பேரும் விடுமுறை முடிந்து வியாழன் இரவு கேரளத்தில் இருந்து குவைத் சென்றுள்ளனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அப்பாஸியா என்ற இடத்தில் உள்ள இவர்களின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் மேத்யூ உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் பலியாகினர்.

முதற்கட்ட தகவலின்படி, அறையில் இருந்த ஏசியில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ விபத்தில் பலியான மேத்யூவுக்கு தாய் மற்றும் மூன்று பேர் உடன் பிறந்தவர்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

SCROLL FOR NEXT