‘நீட்’ தோ்வு வினத்தாள் கசியவில்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் கூறுவது துரதிருஷ்டவசமானது என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவால் லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக மாணவா்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். வினாத்தாள் கசியவில்லை என்றால், சி.பி.ஐ. ஏன் விசாரணை செய்கிறது. ஏன் குற்றவாளிகளைக் கைது செய்கிறது ? எந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்விகளைக் கேட்கிறது ? நாட்டின் கல்வி அமைச்சரின் இந்த அறிக்கையை கேட்டு மாணவா்கள் புண்பட்டிருக்கலாம். இந்த அறிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றாா் ராகவ் சத்தா.