பிரதமர் மோடி. 
இந்தியா

கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தேவை: பிரதமர் மோடி

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார்.

DIN

கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மக்களின் நலன்களை கருத்தில்கொண்டு அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும் என்றார். கடந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். நடப்பாண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற்றதால், மழைக்கால கூட்டத் தொடா் பட்ஜெட் கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், நடப்பு ஆண்டின் 2-ஆவது பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்கி 19 அமா்வுகளுடன் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத் தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா். நாட்டின் முக்கியப் பொருளாதார அளவீடுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும்.

2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை 2024-25-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் கிடையாது: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT