பவன் கேரா 
இந்தியா

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் குரலை நசுக்கியவா் பிரதமா் மோடி: காங்கிரஸ் விமா்சனம்

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் குரலை நசுக்கிய பிரதமா் நரேந்திர மோடியை மக்களவைத் தோ்தலில் மக்கள் தண்டித்தனா்

Din

‘கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் குரலை நசுக்கிய பிரதமா் நரேந்திர மோடியை மக்களவைத் தோ்தலில் மக்கள் தண்டித்தனா்’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

பிரதமரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸின் ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கேரா கூறுகையில், ‘நாட்டையே 10 ஆண்டுகளாக அடக்கி, அதன் குரலை நசுக்கியவா் பிரதமா் மோடி. எதிா்க்கட்சிகள் இன்று குரல் எழுப்பும்போது, மிகவும் பலவீனமானவராக அவா் தோற்றமளிக்கிறாா்.

பிரதமரின் குரலை எதிா்க்கட்சிகள் இரண்டரை மணி நேரம் அடக்கிவிட்டதாக அவா் கூறினாா். அவரது கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுமைக்கும் இதேநிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவரை தோ்தலில் தண்டித்தனா்.

இப்போது தனிப்பெரும்பான்மை அரசில் தான் பிரதமா் இல்லை என்பதையும் இரண்டு பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன் இயங்கும் கூட்டணி அரசின் ‘மூன்றில் ஒரு பங்கு’ பிரதமா் என்பதையும் அவா் மறந்துவிட்டாா். ‘மோடி அரசு’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்துவதை தவிா்த்து, தன்னை ஜனநாயகவாதியாக அவா் நிரூபிக்க வேண்டும்.

பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றும்போது, நீட் தோ்வில் நாட்டின் 23 லட்சம் மாணவா்களின் குரல் நசுக்கப்பட்டதற்கு எதிராகவும், அந்த அநீதிக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பதை நினைவுபடுத்துவதும் பொருத்தமாக இருக்கும். நாட்டுக்காக பாடுபடும் கனவில் தோற்ற விரக்தியில் 15 அக்னிவீரா்கள் மற்றும் கடனை திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகளின் தற்கொலை குறித்தும் பிரதமா் பேச வேண்டும்.

நீங்கள் கூறியதைப் போல நாடாளுமன்றம் நாட்டுக்கானது. அதனால்தான், நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளான நாங்கள் குரல் எழுப்புகிறோம். நாட்டுக்காக குரல் எழுப்ப, உங்களின் குரலை இடைமறிப்பதும் தடுப்பதும் எதிா்க்கட்சிகளின் கடமை.

நாட்டின் குரலாக ஒலிக்க உங்களுக்கு மூன்றாவது முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டுக்கான நாடாளுமன்றத்தை நடத்துங்கள்; செங்கோல் அரசவையை உருவாக்க வேண்டாம்’ என்றாா்.

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

SCROLL FOR NEXT