ராணுவத்தை கைவிட்டு கோழைத்தனமாக பின்வாங்கிய மோடி! பவன் கேரா
ராணுவத்தை கைவிட்டு கோழைத்தனமாக மோடி பின்வாங்கியதாக காங்கிரஸ் விமர்சித்திருப்பது பற்றி...
முக்கியமான நேரத்தில் இந்திய ராணுவத்தை கைவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி கோழைத்தனமாகப் பின்வாங்கியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.
இந்திய எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியபோது, பதிலடி கொடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு தாமதப்படுத்தியதாக முன்னாள் ராணுவத் தளபதி எம்எம் நரவணே எழுதியிருக்கும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய நிலையில், இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பவன் கேரா தெரிவித்திருப்பதாவது:
”ராணுவத்திற்குத் தெளிவு, ஆதரவு மற்றும் அரசியல் உறுதிப்பாடு தேவைப்பட்டபோது, நரேந்திர மோடி கோழைத்தனமாகப் பின்வாங்கி இருக்கிறார்.
சீனாவுடனான நேரடி ராணுவ மோதலின்போது அவர் நமது ராணுவத்தைக் கைவிட்டார். மேலும் மிகவும் முக்கியமான நேரத்தில் அரசியல் தலைமை இல்லாத நிலையில் நாட்டை விட்டுவிட்டார்.
அந்த 56 அங்குல மார்பு 'நாடகம்' முடிந்துவிட்டது. நரேந்திர சரண்டர் மோடி ஒரு கோழை” என்று குறிப்பிட்டுள்ளார்.
Modi abandoned the army and retreated cowardly! - Pawan Khera
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.