தங்கம் விலை நிலவரம் 
இந்தியா

பட்ஜெட் எதிரொலி: தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது!

மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது.

DIN

மத்திய பட்ஜெட்டில், தங்கம் இறக்குமதி வரி 6 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அது தங்கம் விலையில் உடனடியாக எதிரொலித்துள்ளது.

அதன்படி, இன்று பிற்பகலில், ஒரு சவரனுக்கு 2,200 குறைந்து ஒரு சவரன் தங்கம் 52,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு கிராம் தங்கம் விலை ரூ.275 குறைந்து ரூ.6550க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி குறைந்துள்ளது. இதுவரை 15 சதவீதமாக இருந்த தங்கம், வெள்ளி பொருள்களுக்கான வரி தற்போது 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், வெள்ளி விலையிலும் அதிரடி மாற்றம் நடந்துள்ளது.

வெள்ளி ஒரு கிராமுக்கு 3.50 சதவீதம் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.92.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி வரி குறைப்பால், 24 காரட் 10 கிராம் தங்கம் விலை கிட்டத்தட்ட 4000 வரை குறைகிறது.

தங்கத்தை இறக்குமதி செய்யும்போது விதிக்கப்படும் சுங்க வரியை 15% லிருந்து 6% ஆக குறைத்தது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை கடுமையாக உயர்ந்துவந்த நிலையில் 5% வரி குறைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உண்மையாகவே 9% வரிக் குறைப்பு என்பது ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் அளத்திருக்கிறது. இந்த வரிக் குறைப்பு, மக்கள் குறைந்த விலையில் தங்கத்தை வாங்க வழிவகுக்கிறது என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதை மாத்திரை விற்ற இளைஞா் கைது

பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

சைக்கிள் மீது காா் மோதல்: காவலாளி உயிரிழப்பு

பருவமழைக்கு முன் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை

மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT