செல்போன் விலை குறைகிறது 
இந்தியா

செல்போன் விலை குறைகிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்..

DIN

செல்போன்களுக்கான் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்து பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், செல்போன், செல்போன்களுக்கான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவிகிதமாக மத்திய அரசு குறைப்பதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் நாடு முழுவதும் செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

மேலும், புற்றுநோய்களுக்கான 3 மருந்துகளின் சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தங்கம், வெள்ளி, பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதா் அங்காடி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT