மம்தா பானர்ஜி (கோப்புப் படம்) 
இந்தியா

மத்திய பட்ஜெட் மக்களுக்கு எதிரானது! -மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மத்திய பட்ஜெட் மக்களுக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

DIN

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பட்ஜெட் 'இலக்கு இல்லாதது, மக்களுக்கு எதிரானது' என்று மத்திய அரசை கடுமையாக சாடினார்.

இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “மத்திய அரசின் பட்ஜெட் 2024 -25 ஆம் ஆண்டு அரசியல் நோக்கமுடையது. இலக்கில்லாதது, மக்கள் விரோதமானது, தொலைநோக்கு பார்வை இல்லாதது.

இந்த பட்ஜெட்டில் பயனளிக்கக்கூடிய வகையில் எந்த திட்டங்களும் இல்லை. 2024-25 பட்ஜெட் மக்களுக்கு எதிரானது, ஏழைகளுக்கு எதிரானது, அரசியல் நோக்கமுடையது.

இந்த பட்ஜெட் சாமானியர்களுக்கானது அல்ல. இது ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் பட்ஜெட்டாக இருக்கிறது. இது அரசியல் சார்புகள் நிறைந்த பட்ஜெட்.

பாரதிய ஜனதா கட்சி தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், அதை அவர்கள் நிறைவேற்றவில்லை. வாக்குகள் பெற்ற பிறகு டார்ஜிலிங்கையும், கலிம்போங்கையும் மறந்துவிட்டார்கள்.

டார்ஜிலிங் மலைப்பகுதி மக்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும். சிக்கிம் மாநிலத்துக்கு தேவையானவற்றை செய்யட்டும், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், டார்ஜிலிங்கை ஒதுக்கி வைப்பது சரியல்ல” என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 5 புதிய அறிவிப்புகள்!

முழுமதி... காஜல் அகர்வால்!

பாகிஸ்தானின் அதிபராகப் பதவியேற்கிறாரா ராணுவ தலைமைத் தளபதி?

பாஜக ஆளும் மாநிலங்களில் கம்பு சுற்றுங்கள்: ஆளுநர் மீது முதல்வர் விமர்சனம்!

ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!

SCROLL FOR NEXT