காசி விஸ்வநாதர் கோயில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்!
நிகழாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து வருகிறார்.
இந்தியாகாசி விஸ்வநாதர் கோயில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்!
நிகழாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து வருகிறார்.
காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்டவை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். அவரது உரையில்,
கோயில்களைத் தரம் உயர்த்துவது குறித்துப் பேசப்பட்டது. அதில் முக்கியமாகப் பிரசித்தி பெற்ற வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்டவை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்.
மேலும், பிகார் மற்றும் புத்தகயா கோயில்கள் மேம்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.