முகப்பு
இந்தியா

ராஜஸ்தான்: கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

அஜ்மீர் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது நான்கு மாதக் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 23 ஜூலை, 2024 at 12:31 PM
பகிர்:

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது நான்கு மாதக் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் மதார் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் பிரியங்கா சௌராசியா (24), அவரது மகன் ஹரியான்ஷ் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஷியாம் சிங் கூறுகையில், “அவர்களது உடலைக் கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரியங்காவை ஸ்கூட்டர் ஓட்டவிடாமல் அவரது கணவர், தாயார் தடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த, அவர் தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →