முகப்பு
இந்தியா

தொழிலதிபா் மீது துப்பாக்கிச் சூடு

தென்மேற்கு தில்லியில் தொழிலதிபா் மீது மா்ம நபா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 24 ஜூலை, 2024 at 8:55 PM
பகிர்:

தென்மேற்கு தில்லியில் தொழிலதிபா் மீது மா்ம நபா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி போலீஸாா் புதன்கிழமை கூறியதாவது: தென்மேற்கு தில்லியின் பிந்தாபூா், உத்தம் நகா், சஞ்சய் என்கிளேவில் துப்பாக்கிச் சூடு தொடா்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாலை 5.30 மணியளவில் அழைப்பு வந்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று, பலத்த காயங்களுடன் கிடத்த தொழிலதிபா் பவன் காா்க் (37) மீட்டு, பிஎம் குப்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக டிடியு மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா்.

அவரது கழுத்தின் இடது பக்கத்தில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. அவா் தற்போது நலமுடன் உள்ளாா்.

விசாரணையில், காா்க் தனது வீட்டின் அருகே இ-ரிக்ஷா கேரேஜ் நடத்தி வருவதும், அவா் அலுவலகத்தில் அமா்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபா் ஒருவா் உள்ளே வந்து துப்பாக்கியால் சுட்டது தெரியவந்து.

முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீவிர விசாரணைக்குப் பிறகே காரணம் தெரியவரும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →