மணீஷ் சிசோடியா, கேஜரிவால், கவிதா 
இந்தியா

கேஜரிவால், சிசோடியா, கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

தொடர்ந்து மூவரின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை உச்ச நீதிமன்றம் நீட்டித்தது..

PTI

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவர் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறையின் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கலால் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேஜரிவால், மணீஷ் சிசோடியா, கவிதா ஆகியோர் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்த பிப். 26ஆம் தேதி கைது செய்து, திகார் சிறையில் அடைத்தது.

அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 9 அன்று பணமோசடி வழக்கில் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. பிப்ரவரி 28, 2023 அன்று தில்லி அமைச்சரவையிலிருந்து சிசோடியா ராஜிநாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, கலால் ஊழல் வழக்கில் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்தது. அதைத்தொடர்ந்து அவரை திகார் சிறையில் சிபிஐயும் கைது செய்தது.

கலால் வழக்கில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும் இந்த வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) கைது செய்ததால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் சிபிஐ வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்துவருகிறார். தொடர்ந்து அவரின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கத்தியை காட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 4 போ் கைது

தேசிய சாலை பாதுகாப்பு வார உறுதிமொழி ஏற்பு! துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்பு!

3 கிலோ கஞ்சா பறிமுதல்: 8 போ் கைது

விபத்துக்குள்ளான காரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மணவெளியில் செம்மண் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT