கோப்புப் படம் 
இந்தியா

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவிருந்த மம்தாவின் பயணம் ஒத்திவைப்பு!

மத்திய பட்ஜெட்டில் பாகுபாடு இருப்பதாகக் கூறி, இந்தியா கூட்டணிக் கட்சிகள் நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பு

DIN

நீதி ஆயோக் கூட்டத்திற்காக தில்லி செல்லவிருந்த மம்தா பானர்ஜியின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 23ஆம் தேதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார். தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி முதல்வர்கள் உள்ளிட்டோர், நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.

அதாவது, வருகிற ஜுலை 27ஆம் தேதியில் நடைபெறவிருக்கும் நீதி ஆயோக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று (ஜூலை 25) விமானத்தில் புறப்படவிருந்தார். ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜியின் இன்றைய தில்லி பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மம்தா நாளை (ஜூலை 26) தில்லி செல்வாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ``அதுகுறித்த தகவல்கள் நாளையே தெரியவரும்” என்றும் தெரிவித்துள்ளனர்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மாநிலம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கவிருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலினும் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT