கோப்புப்படம்
இந்தியா

மட்டனுக்கு பதிலாக நாய் இறைச்சி விற்பனை? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

உணவகம் ஒன்றில் மட்டனுக்கு பதிலாக நாய் இறைச்சி விற்பனை? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

DIN

ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி விற்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெங்களூரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் நாய் இறைச்சி விற்கப்படுவதாக இந்துத்துவா அமைப்புகள் சில வெள்ளிக்கிழமை(ஜூலை 26) புகாரளித்துள்ளன.

நாய் இறைச்சி ஜெய்ப்பூர் - மைசூரு விரைவு ரயில் மூலம் ராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மேற்கண்ட அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. மேலும், கடந்த 12 ஆண்டுகளாக அந்த கடையில் நாய் இறைச்சி விற்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கே 90 பார்சல்கள் ரயிலிலிருந்து வந்திறக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மேற்கண்ட புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை ஆணையர் முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அந்த கடையிலிருந்த இறைச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வெளியானபின், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT