சிசிடிவி காட்சி 
இந்தியா

விடுதிக்குள் சென்று பெண்ணைக் கொன்றவர் கைது!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தோழியைக் கொன்றுவிட்டு தப்பியோடியவர் கைது

DIN

பெங்களூருவில் கிரிதி குமாரி என்ற பெண்ணை கொலை செய்த அபிஷேக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கிரிதி குமாரி தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அவருடன் வேறொரு பெண்ணும் உடன் தங்கியிருந்தார்.

உடன் தங்கியிருந்த அந்த பெண்ணுக்கும் அவருடைய காதலருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. பிரச்னை ஏற்படும் போதெல்லாம் கிரிதி, அவர்கள் இருவரையும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்து விடுமாறு கூறியுள்ளார். இதனால், கிரிதியின் மீது கோபமுற்ற அபிஷேக் கிரிதியை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

இதனைத் தொடந்து, கடந்த ஜூலை 23ஆம் தேதி இரவு 11 மணியளவில் கிரிதியின் அறைக்குள் சென்ற அபிஷேக், தான் கொண்டு வந்த கத்தியால் கிரிதியை பலமுறை தாக்கியுள்ளார். இதனால், காயமடைந்த கிரிதி சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

பின்னர், கொலை செய்த அபிஷேக் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கிரிதி தங்கியிரிந்த விடுதியில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தபின், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபிஷேக்கை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், தப்பிச் சென்ற அபிஷேக் மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் இருப்பது தெரியவந்து, அவரை கையும்களவுமாக கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் வாட்டி வதைக்கும் குளிா்- வெப்பநிலை 3 டிகிரியாக குறைந்தது

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

SCROLL FOR NEXT