பெங்களூரு விமான நிலையத்தில் கொரியாவில் இருந்து சுற்றுலா வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு பாலியல் தொல்லை அளித்து விமான நிலைய ஊழியரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் சுற்றுலாவுக்காக வருகைதந்த கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சொந்த நாட்டுக்குப் புறப்படவிருந்தார்.
குடியேற்றத் துறை சோதனைக்குப் பிறகு விமானத்துக்குச் செல்ல தயாரான போது, அவரை அணுகிய விமான நிலைய ஊழியர் அஃபான் அகமது என்பவர், அவரின் உடமை பைகளில் சப்தம் வருவதாகவும் சோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரை தனிப்பட்ட முறையில் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, கழிப்பறை பகுதி அருகே அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்பகுதியைவிட்டு உடனடியாக அகமது புறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு விமான நிலைய காவல் துறையினரிடம் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட அகமதுவை கைது செய்து பெங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.