பிரதமர் மோடி 
இந்தியா

விக்சித் பாரத் திட்டத்தில் அனைத்து மாநிலங்களின் பங்கும் அவசியம்: பிரதமர் மோடி

விக்சித் பாரத் திட்டத்தில் அனைத்து மாநிலங்களின் பங்கும் அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி

பிடிஐ

புது தில்லி: வரும் 2047ஆம் ஆண்டில், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது என்பது, ஒவ்வொரு இந்தியர்களுக்குமான இலக்கு, இதில், அனைத்து மாநிலங்களும் பங்கேற்று, இலக்கை அடையும்வகையில் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மாநில அரசுகள்தான் நேரடியாக மக்களுடன் தொடர்புகொண்டிருப்பவை என்றும் அதனால், விக்சித் பாரத் திட்டத்துக்காக மாநிலங்களின் பங்கு அளப்பரியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விக்சித் பாரத் 2047 என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்குமான லட்சியம்.

மாநில அரசுகள்தான், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதால், மாநிலங்கள் இந்த திட்டத்தின் இலக்கை அடைய ஊக்கத்துடன் செயல்பட வேண்டும்.

இந்த நூற்றாண்டானது, தொழில்நுட்பம் மற்றும் புவியியல் மாற்றங்களுக்கானது. இவை அனைத்துமே நமக்கான வாய்ப்புகள். இந்த மாற்றங்களை இந்தியா தனது முன்னேற்றப்பாதைக்காகப் பயன்படுத்திக்கொண்டு, சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை மைல்கல்லாக இதுவே இருக்கும்.

2047ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் பேசப்படும்.

மத்திய அரசின் திட்டங்கள், நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதே இலக்கு என்றும் மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT