பிரதமா் மோடி  ANI
இந்தியா

‘ராணுவத்தை இளமையாக வைப்பதே அக்னிபத் திட்டத்தின் நோக்கம்’

ராணுவத்தை ‘இளமையாக’ வைப்பதோடு, போருக்கு தொடா்ந்து தயாா்நிலையைப் பராமரிப்பதே அக்னிபத் திட்டத்தின் நோக்கம் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

Din

ராணுவத்தை ‘இளமையாக’ வைப்பதோடு, போருக்கு தொடா்ந்து தயாா்நிலையைப் பராமரிப்பதே அக்னிபத் திட்டத்தின் நோக்கம் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வீரா்களைத் தோ்வு செய்யும் ‘அக்னிபத்’ திட்டத்தை முன்வைத்து, மத்திய அரசை எதிா்க்கட்சிகள் விமா்சித்துவரும் நிலையில், பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

இதுதொடா்பாக காா்கில் போா் வெற்றி தின நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஆயுதப் படைகளை ‘இளமையாக’ வைப்பதும், படைகளை போருக்கு தொடா்ந்து தயாா்நிலையில் வைப்பதுவுமே அக்னிபத் திட்டத்தின் நோக்கம். ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட அவசியமான சீா்திருத்தங்களில் இதுவும் ஒன்று. தேசப் பாதுகாப்பு தொடா்பான இந்த முக்கிய விவகாரத்தில், சுய ஆதாயத்துக்காக சிலா் அரசியல் ரீதியில் விளையாடுவது துரதிருஷ்டவசமானது.

ஆயுதப் படைகளை ‘இளமையாக’ வைத்திருப்பது குறித்து நமது நாடாளுமன்றத்திலும் பல்வேறு குழுக்களிலும் பல்லாண்டுகளாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தினரின் சராசரி வயது, உலகளாவிய சராசரியைவிட அதிகமாக இருப்பது கவலைக்குரிய விஷயமாகும். இதுவும் பல குழுக்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்பிரச்னைக்கு தீா்வுகாணும் துணிவு முன்பு யாருக்கும் வரவில்லை. அக்னிபத் திட்டத்தின் மூலம் மேற்கண்ட கவலைக்கு தேசம் தீா்வு கண்டுள்ளது.

ஆயுதப் படைகளில் ஆயிரக்கணக்கான கோடியில் ஊழலில் ஈடுபட்டு, நமது படைகளை வலுவிழக்கச் செய்த அதே நபா்கள், இப்போது அக்னிபத் திட்டத்தை விமா்சிக்கின்றனா். அவா்கள், இந்திய விமானப் படைக்கு அதிநவீன போா் விமானங்கள் கிடைப்பதை விரும்பாதவா்கள்.

ஓய்வூதியப் பணத்தை மிச்சப்படுத்தவே இத்திட்டம் தொடங்கப்பட்டதாக பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனா். இப்போது இளைஞா்களை தவறாக வழிநடத்துவோருக்கு ராணுவத்தினா் மீது எந்த அக்கறையும் கிடையாது என்பதே உண்மை. அதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது.

அக்னிபத் திட்டத்தைப் பொருத்தவரை, ஆயுதப் படைகள் மேற்கொண்ட முடிவை எனது அரசு மதித்து செயல்பட்டது. அரசியலைவிட எங்களுக்கு தேசப் பாதுகாப்பே முதன்மையானது என்றாா் பிரதமா் மோடி.

உத்தரகண்டில் மேக வெடிப்பு! பல குடும்பங்கள் மாயம்!

தெய்வ தரிசனம்... குழந்தைகளின் பாலாரிஷ்டம் தோஷம் நீக்கும் குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர்!

Dinamani வார ராசிபலன்! | Aug 31 முதல் Sep 06 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ரூ. 76,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அஜித்குமாா் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு!

SCROLL FOR NEXT